வேண்டுதல்


பாடல்கள் எண்ணிக்கை: 6,   ஒவ்வொன்றும் ஒவ்வொரு படை வீட்டுக்கு சமர்ப்பணம்

தாக்கம் : திருக்குறள், திருஅருட்பா, வேதாத்திரி மகரிஷி நூல்கள்

தமிழ் இலக்கணம் வெண்பா மற்றும்  எதுகை மோனை சொற்கள்


1. சுவாமிமலை (கசடற கற்று, கற்றதை போதித்தல்)


நின் அருளாளே

நின் பொற்ப்பாதம் பனிந்து

நித்தமும் நின் நினைவு

நீங்காத நிலை தந்தருள்வாய் முருகா!


2. பழனி (மெய்ஞானம் பெறுதல் – All our internal glands (chakras like kundalini, manipuragam, swathistanam, anathagam, visuthi, aakinai and thuriyam are behind) involved in this function and we can able to control through our mind)

அய்ம்புலன்கள் அடக்கி

ஆசைகள் வேரருத்து

அறிவை மேலேற்றி

அய்யனைக் கான அருள்புரிவாய் முருகா!


3. திருச்செந்தூர் (மனதில் தீய எண்ணங்களை அழித்தல்)

ஏற்ப்புடைய எண்ணங்கள் யாவும்

எதிர் வினைகள் யாவுமின்றி

என் அண்ணன் நின் அருளாளே

எளிதில் நிறைவேறிட எமை ஏற்ப்பாய் முருகா!


4. திருப்பரங்குன்றம் (இச்சா சக்தி - மனதில் நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை விதைத்தல்)

உடலால் உயிரால் மனத்தால்

உன்னையே நினைந்து உருகுவோர்க்கு

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல்

உண்மையே பேசுவோர்க்கு உறுதுணையாவாய் முருகா!


5. திருத்தணி (கிரியா சக்தி - அவைகள் செயலாக்கம் பெறுதல்)

கற்பு நிலை தவறாது – நின்

கரம் பற்றுவோர்

கரம் பற்றி பிறவி பெருங்கடல்

கரை சேர்ப்பாய் முருகா!


6. பழமுதிர்ச்சோலை (முழுமை நிலை பெறுதல்)

பிறர் மனை நோக்கா பெருவாழ்வும்

பிறர் துயர் தன் துயர் போக்கிடவே

பிறப்பு இறப்பு அற்ற முக்தி நிலையும் வேண்டியே

பிதற்றுகின்றேன் என்றும் என் பேரருளாளனே முருகா!



என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment