தவம்


அணுவை ஆராய்ந்தேன் ஆதி நீயென்றாய்
ஆதிநீயெனில் பேதமை ஏனென்றேன்

பேதமை இல்லை பிறப்பால் ஒன்றென்றாய்
பிறப்பாலொன்றெனில் பிரிவு ஏனென்றேன்

வினை வழியே விதி என்றாய்
விதியை வெல்ல வழியாதென்றேன்

தவப்பயனே தலைசிறந்த வழி என்றாய்
தவப்பொருளாய் எதைக்கொள்வது என்றேன்

கருப்பொருளாய் தன்னையே கொள் என்றாய்
தவமென்றால் விளங்கவில்லை என்றேன்

தன்னுள் தன்னையறிவதே தவமென்றாய் அதிலே
அறியப்படுபவனே  அறிபவனாகி  நின்றாய் !!

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்








என்றும் அன்புடன்
அருட்தொண்டன் கலைக்குமார் சிவதாஸ்

1 comment:

  1. அருமை மாப்ள வாழ்த்துகள்...i am balu...

    ReplyDelete