தமிழே ! முத்தமிழே ! முதல் மொழியே !
தலைவனுக்காக தலைவியிடம் தூது செல்லாயோ ?
தலைவனின் தனிமையை தலைவிக்கு எடுத்தியம்பி
தலைவியின் தகவலென்ன தலைவனுக்கு சொல்லாயோ ?
கந்தக்கடவுளின் கட்டளைக்கு காத்திருந்தேன் என்று
கலையின் கன்னிமையிலுக்கு கண்ணியமுடன் சொல்லாயோ ?
கலைதான் அழைத்தானென்று கண்ணெதிரே கணப்பொழுதில்
காட்சிதர கன்னிமையிலுக்கு கனிவுடன் சொல்லாயோ ?
பச்சைவண்ணப் பட்டுடனே பரிசம்போட வருவேனென்று
பவளக்கொடி பாவைக்கு பாசத்துடன் சொல்லாயோ ?
கருணையே வடிவாகிய கந்தக்கடவுள் - நம்மை
கண்ணிமைபோல் காப்பானென்று கன்னிமையிலுக்கு சொல்லாயோ ?
குறிப்பு : என் உயிராகிய தமிழை, என்னவளை என்னிடம் அழைத்துவர தூதாக அனுப்பினேன் .
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment