(அ)கரம் + (உ)கரம் + (ம்)கரம் = ஓம் ( முருகா )

அகரம் - வாழ்த்து


அம்மையே !
அப்பனே !
அன்பே !
அழகே !
அமுதே !
அருளே !
அறிவே !
அயிலே !
அரசே !
அறுபடையே !
அலைகடலே !
அருட்பெரும்சுடரே !
அடர்மழையே !
அணுவே !
அந்தமே !
அண்டமே !
அகிலமே !
ஆற்றலே !
ஆதியே !
ஆண்மையே !
ஆண்டவனே !
ஆருயிரே !
ஆறுமுகனே !  
 

உகரம் - வேண்டுகோள்

உடல் மெலிய
உயிர் உருக
உச்சி மிளிர
உன்னடி சேர
உன்னதநிலை அடைய
உதவுவாய் முருகா !

மகரம் - ஏக்கம்


முகத்திரை (மாயை) யாவும் நீங்குமோ 
முருகா உந்தன் அருளாலே !

முன்வினை யாவும் தீருமோ
முருகா உந்தன் அருளாலே !

முன்னின்று எமை காப்பாயோ
முருகா உந்தன் அருளாலே !

முன்னமே உன்னை சேர்வேனோ
முருகா உந்தன் அருளாலே !

முக்தியை நானும் அடைவேனோ
முருகா உந்தன் அருளாலே !
  
முடிவிலா நின்பெருவாழ்வு எமக்கருள்வாயோ 
முருகா உந்தன் அருளாலே !
 
குறிப்பு :

(அ)காரம்  +  (உ)காரம்  +  (ம்)காரம் =   ஓம் ( முருகா )
  
1. அகாரம்  = 1 வரியில் , 1 வார்த்தையில் உள்ளத்தின் வாழ்த்தாய் அமையப்பெற்ற பாடல்  
2. உகாரம்  = 1 வரியில் , 2  வார்த்தையில் உள்ளத்தின் வேண்டுகோளாய் அமையப்பெற்ற  பாடல் 
3. மகாரம் =  1 வரியில் , 3  வார்த்தையில் உள்ளத்தின் ஏக்கமாய் அமையப்பெற்ற பாடல்

என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்

No comments:

Post a Comment