வருவாய் நற்புகழுடையதாய் புத்தாண்டே !
வழியெல்லாம் பூக்கள் நிரப்பிடவே !
வானவில்லாய் மலர் தோரணமே !
வாழ்வில் வசந்தம் வீசிடவே !
வலிமையிலும் வலிமையான உடல்நலமே !
வண்ணத்து பூச்சியென மனமே !
வருங்காலம் இனி வண்ணமயமாகிடவே !
வசந்தகாலமாய் வாழ்வு சிறந்திடவே !
வேளாண்மை வளம் பெருகிடவே !
வேண்டுவன யாவும் நல்கிடவே !
விஞ்ஞானத்தை வளர்க்கும் நல்லறிவே !
வாழ்நாளெல்லாம் வற்றாத நல்வளமே !
வஞ்சகம் இல்லாத நல்லுறவே !
வீழ்த்த முடியாத வீரத்தையே !
வழங்கிடுவாய் நிலையான நிதானத்தையே !
வணங்கினேன் தமிழால் உமையே !
வரமளித்து வாழவைப்பாய் எங்களையே !
வழங்கிடுவாய் நற்பண்புகளை யாவர்க்குமே !
வழங்கிடுவாய் மாண்புகளை மன்னுயிர்களுக்குமே !
வழங்கிடுவாய் நன்மையை அனுதினமே !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment