கனவிலும் நனவிலும் எமை
கைவிடாத இறையே வாழ்க !
கண்ணிமைப்போல் எப்பொழுதும் எமை
காத்துநிற்கும் கந்தனே வாழ்க !
முப்பொழுதும் எப்பொழுதும் எமை
முழுதும்காக்கும் முருகனே வாழ்க !
பரிபூரணமாய் எப்பொழுதும் எமை
பாதுகாக்கும் பரம்பொருளே வாழ்க !
அனைத்துமாகி எப்பொழுதும் எமை
அரவணைக்கும் அருட்பெரும்ஜோதியே வாழ்க !
என்றும் அன்புடன்
கலைக்குமார் சிவதாஸ்
No comments:
Post a Comment